கேரளாவில் மானிய விலையில் ஆண்டிற்கு 9 சிலிண்டர்கள் வழங்க முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் எல்லா தரப்பு மக்களுக்கும் மானிய விலையில் ஆண்டிற்கு 9 கேஸ் சிலிண்டர்கள் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
வீட்டு பயன்பாட்டிற்கான மானிய விலையிலான சிலிண்டர்கள் ஆண்டிற்கு 6 மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கேரளாவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும், மானிய விலையில் ஆண்டிற்கு 9 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள எல்லா தரப்பு மக்களுக்கும், மானிய விலையில் 9 சிலிண்டர்களை வழங்க வேண்டும் என்று கேளராவில் போராட்டங்கள் நடைபெற்றது. இது குறித்து ஆலோசிக்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.
அதன்பிறகு முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாவது,
டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பஸ் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கும்படி தனியார் பஸ் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் மானிய விலையில் ஆண்டுக்கு 9 கேஸ் சிலிண்டர் வழங்க கேரள அரசு முடிவு செய்தது. இந்த சலுகை அனைத்து தரப்பினருக்கு வழங்கும்படி ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதை ஏற்று எல்லா தரப்பு மக்களுக்கும் ஆண்டுக்கு 9 சிலிண்டர் வழங்கப்படும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications