பிளாட் காட்டுவதாகக் கூறி பெண்ணை காரில் வைத்து கற்பழித்த 3 ரியல் எஸ்ட்டே புரோக்கர்கள்!
காஜியாபாத்: பிளாட்டுகளைக் காட்டுவதாகக் கூறி பெண்ணை காரில் ஏற்றிச் சென்ற 3 ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அவரை காரில் வைத்தே கற்பழித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் இந்த சம்பவம் நடந்தது. 35 வயதான ஒரு பெண் பிளாட் வாங்குவதற்காக குர்காவ்ன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரை நாடியுள்ளார்.
அவரும் அவரது நண்பரும் ட்ரோனிகா சிட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் பிளாட்களை காட்டுவதாகக் கூறி அவரை ஸ்கார்பியோ காரில் அழைத்துச் சென்றனர். வழியில் இன்னொரு ரியல் எஸ்டேட் புரோக்கரையும் ஏற்றிக் கொண்டனர்.
அந்த நபர் குளிர்பானம் வாங்கி வந்திருந்தார். அதை அந்தப் பெண்ணுக்குத் தரவே அவர் மயங்கிவிட்டார்.
இதையடுத்து மயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை மூன்று பேரும் சேர்ந்து கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை வீட்டில் மயக்க நிலையிலேயே இறக்கிவிட்டுச் சென்றனர்.
மயக்கம் தெளிந்த பின்னரே அவருக்கு தான் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து காஜியாபாத் போலீசில் அந்தப் பெண் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் புபேந்தர், ரவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்றாவது நபர் தப்பிவிட்டார். அவரைத் தேடி வருகின்றனர். ஸ்கார்பியோ காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications