உதயக்குமாரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்... காங்கிரஸார் ஆவேசம்
சென்னை: உதயக்குமார் போன்றவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்பாவி மக்களை அவர் தனது சுயலாபத்திற்காகத் தூண்டி வருகிறார் என்று காங்கிரஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த ஆர்பபாட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதாரணி, குமரி அனந்தன், ஜேஎம் ஆரூண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில்,
கூடங்குளம் அணுமின் நிலையம் காலத்தின் கட்டாயம். இதனால் ஆபத்து ஏற்படாது. 7 அடுக்கு பாதுகாப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர் என்றார்.
ராமசுப்பு எம்.பி. பேசுகையில், நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தை தடுக்கிறார்கள். உதயகுமார் போன்றவர்களை முளையிலேயே கிள்ளி எறிந்து இருக்க வேண்டும். இடிந்தகரை பகுதியில் அப்பாவி மக்களை தங்கள் சுயலாபத்துக்காக உதயகுமார் மற்றும் சில அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
உங்களால்தானே காங்கிரஸ் போச்சு.. தங்கபாலுவுக்கு எதிராக திடீர் கோஷம்
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே தங்கபாலு தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்கபாலு மைக்கைப் பிடித்து உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு தொண்டர் தங்கபாலுவைப் பார்த்து, காங்கிரஸ் அழிவதற்கு நீங்க தான் காரணம் இங்க வந்து சரியானவர் போல பேசுகிறீரே என்று கோபமாகப் பேச தங்கபாலு டெனஷன் பிளஸ் அதிர்ச்சியாகி விட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த தொண்டரை அங்கிருந்து அகற்றி வைத்து தங்கபாலவை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications