ஜெகன் மோகனின் ரூ. 51 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கப் பிரிவு

பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பாக சிபிஐயால் கைது செய்யப்பட்டு இப்போது ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் இருக்கும் நிலையில், அவரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சொத்துக்கள் ஜெகனின் ஜகதி பப்ளிகேஷன் மற்றும் ஜனனி கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவை ஆகும். இதனால் இந்தச் சொத்துக்களை இனிமேல் ஜெகன் எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது.
சட்ட விதிகளை மீறி பல்வேறு நிறுவனங்களுக்கு ராஜசேகர ரெட்டியும் ஜெகனும் சேர்ந்து சுரங்க அனுமதிகள், சிறப்புப் பொருளாதார மண்டல அனுமதிகள் வழங்கியதில் அரசுக்கு ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதற்குப் பிரதிபலனாக இந்த நிறுவனங்கள் ஜெகனின் பல்வேறு நிறுவனங்களில் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளன.
தனக்கு முதல்வர் பதவி தராததையடுத்து காங்கிரசிலிருந்து பிரிந்த ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தை பெயரில் தனிக் கட்சி தொடங்கி, சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீன் மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications