நானும் காஷ்மீரி தான்!.. ராகுல் காந்தி 'தாஜா' செய்தும் கிராம தலைவர்கள் வெளிநடப்பு!

காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகளில் வெளிப்படையாகவே முட்டல் மோதல் நடந்து வருகிறது.
இந் நிலையில் காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி அங்கு கிராமத் தலைவர்கள் கூட்டத்தில் பேசுகையில், நானும் காஷ்மீர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான் (ஜவஹர் லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட் ஆவார்).
உங்கள் பிரச்சனைகளை நான் முழுமையாக அறிவேன். பிரச்சனைகளைக் களைய முடிந்தவரை உழைப்பேன்.
காஷ்மீர் மக்களுடன் வாழ்நாள் முழுவதும் நட்புடன் இருக்க விரும்புகிறேன். என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்றார்.
ஆனால், இது போன்ற வெற்று வார்த்தைகளை நாங்கள் ஏற்க முடியாது. எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று கூறிய கிராமத் தலைவர்கள் ராகுல் காந்தியின் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர்.
குஜராத் தேர்தல் நடக்கப் போகுதே.. பிரச்சாரத்துக்கு போகலையா ராகுல்ஜி!












Click it and Unblock the Notifications