ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏ.சி சண்முகத்திற்கு சிறப்பு கவுரவ டாக்டர் பட்டம்!
சென்னை: சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக வேந்தரும், பெங்களூர் ராஜராஜேஸ்வரி கல்வி நிறுவன தலைவருமான ஏ.சி.சண்முகத்துக்கு சிறப்பு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
நோபல் பரிசு பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகழ்பெற்ற டாக்டர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருவது பன்னாட்டு மருத்துவ அறிவியல் கழகம். இந்த கழகத்தின் 2 நாள் மாநாடு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ள அஜ்மன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பிரபல கல்ப் மருத்துவ பல்கலை கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா நாளை மாலை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக வேந்தரும், பெங்களூர் ராஜராஜேஸ்வரி கல்வி நிறுவன தலைவருமான ஏ.சி.சண்முகத்துக்கு சிறப்பு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
அவருக்கு அஜ்மன் இளவரசர் ஷேக் ஹமீத் பின் ரஷீத் அல் நுவாமி பட்டத்தை வழங்கி பாராட்ட உள்ளார். பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பல் மருத்துவமனையிலும் கடந்த 10 ஆண்டுகளாக கட்டணம் இல்லாமல் அறுவை சிகிச்சை மற்றும் இலவச படுக்கை வசதியுடன் சிகிச்சை அளித்து வரும் பணிக்காக ஏ.சி.சண்முகத்திற்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications