ஒகேனக்கலில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Subscribe to Oneindia Tamil
ஒகேனக்கல்: காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் எல்லைப்பகுதியான ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளம் பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், படகுப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications