சென்னையில் பயங்கரம்...12 வயது சிறுவன் தூக்குப் போட்டுத் தற்கொலை
சென்னை: சென்னை ஆவடியில் 12 வயது சிறுவன் ஒருவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஆவடி சேக்காடு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மனைவி தமிழரசி. கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு 12 வயதில் சூர்யா என்ர மகன் இருந்தான். மேலும் 9 வயதில் கார்த்தி, 7 வயதில் அப்பு ஆகிய குழந்தைகளும் உள்ளனர். சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.
சூர்யா கும்பகோணத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி 7ம் வகுப்பு படித்து வந்தான். ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கார்த்தி 4ம் வகுப்பும், அப்பு 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சூர்யா சரியாக படிக்காமல் இருந்ததாக தெரிகிறது. பள்ளிக்கும் சரிவரப் போவதில்லையாம்.
இதையடுத்து மகனை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார் கிருஷ்ணமூர்த்தி. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று தனது மற்ற இரண்டு மகன்களும் பள்ளிக்குப் போகாமல் சூர்யாவோடு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி சூர்யாவைக் கண்டித்துள்ளார். பின்னர் மற்ற இரு மகன்களையும் பள்ளிக்குக் கூட்டிப் போய் விட்டார். இந்த நிலையில் மன வேதனை அடைந்த சூர்யா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். தனது தாயாரின் சேலையில் அவன் தூக்குப் போட்டுள்ளான்.
போலீஸாருக்குத் தகவல் கிடைத்து விரைந்து வந்து உடலை மீட்டனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. 12 வயது சிறுவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications