காவிரிப் பிரச்சினை -உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட திருமா கோரிக்கை!
சென்னை : காவிரி நதி நீர் பிரச்சனைக்காக, முதல்வர் ஜெயலலிதா உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், அத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், பிற அரசியல் கட்சிகளையும் விவசாயச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து காவிரி நீர் உரிமையை மீட்பதற்கு முழு அடைப்புப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரும் இந்தியத் தலைமை அமைச்சருமான மாண்புமிகு மன்மோகன்சிங் தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீர் வழங்க வேண்டும் என ஆணையிட்டதைத் தொடர்ந்து கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் மறு ஆய்வுக்கு மனு செய்தது.
அவ் வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசின் போக்கைக் கண்டித்துள்ளது. அத்துடன் கர்நாடக அரசின் கோரிக்கையை முற்றிலுமாக மறுதலித்துள்ளது.
ஆனாலும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தையும் காவிரி நதிநீர் ஆணையத்தையும் அவமதிக்கும் வகையில் கடந்த ஒரு சில நாட்களாக வழங்கி வந்த குறைந்த அளவு தண்ணீரையும் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
அதாவது, கடந்த செப்டம்பர் 20 ம் தேதி முதல் அக்டோபர் 15 ம் தேதி வரையில் சம்பா நெல் சாகுபடியைக் காப்பாற்றும் வகையில் காவிரி நீரை தமிழகத்திற்கெனத் திறந்துவிட தலைமை அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆணையிட்டார்.
இதனை எதிர்த்துக் கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் போராட்டங்கள் என்கிற பெயரில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தமிழகத்துக்கு எதிரான போராட்டங்களை கன்னடர்கள் தீவிரமாக நடத்தி வரும் சூழலில் தமிழகம் எத்தகைய சலசலப்புமின்றி அமைதியாய் இருப்பது ஏன் என்று விளங்கவில்லை.
தமிழக முதலமைச்சர் தற்போது கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தகுந்தது தான் என்றாலும், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கத் தயங்குவது ஏன் என்றும் விளங்கவில்லை.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடந்த சில வாரங்களாகவே காவிரிச் சிக்கலில் களமிறங்காமல் அமைதி காப்பது ஏன் என்றும் புரியவில்லை.
தற்போதுள்ள சூழலில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து சாதி, மத வரம்புகளைத் தாண்டி தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அணிதிரண்டு போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் . அத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், பிற அரசியல் கட்சிகளையும் விவசாயச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து காவிரி நீர் உரிமையை மீட்பதற்கு முழு அடைப்புப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications