ஸ்பெக்ட்ரம் ஊழல்: பார்லி. கூட்டுக் குழு கூட்டத்தை புறக்கணித்தன அனைத்து எதிர்க்கட்சிகளும்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் இருந்து இடதுசாரி கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்தன. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இன்றைய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டது.
பாஜக புறக்கணிப்பு
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக அனைத்து கட்சியினரும் இடம்பெற்றிருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு பிரதமர் மன்மோகன்சிங்கையும் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா, இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மன்மோகன்சிங்கையும் சிதம்பரத்தையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பவில்லையென்றால் கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று பாஜக அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய கூட்டத்தில் பாஜகவினர் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இடதுசாரிகள் வெளிநடப்பு
இன்றைய கூட்டம் பி. சாக்கோ தலைமையில் கூடிய போது, மன்மோகன்சிங்கையும் சிதம்பரத்தையும் விசாரணைக்கு அழைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் குப்தா வெளிநடப்பு செய்தார். குருதாஸ் குப்தாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் அறிவித்திருக்கின்றன.
மத்திய அரசுக்கு சிக்கல்
எதிர்க்கட்சிகளும் ஆதரவு தரும் கட்சிகளும் ஒரு சேர மன்மோகன்சிங்கையும் சிதம்பரத்தையும் விசாரிக்க வலியுறுத்தி வருவதால் மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடி உருவாகி இருக்கிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications