லண்டனில் புற்று நோயாளிக்கு இந்திய பெண்ணின் ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை!
மும்பை: லண்டன் மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு நாக்பூரைச் சேர்ந்த ஒருவரது ஸ்டெம் செல்கள் மாற்றப்பட்டிருக்கிறது. வெளிநாடு ஒன்றுக்கு இந்தியரின் ஸ்டெம் செல் கொண்டு செல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான "Datri"யின் நிர்வாகி ரகு ராஜகோபால் கூறியுள்ளதாவது:
புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்டெம் செல்களை வழங்குவோர் பற்றி சர்வதேச அளவில் தரவுகளை சேகரித்து வைத்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு எமது அமைப்பை இங்கிலாந்தைச் சேர்ந்த "Anthony Nolan" என்ற அமைப்பு தொடர்பு கொண்டு ஸ்டெம் செல் வழங்குவோர் பற்றிய தகவலைக் கேட்டிருந்தது.
அதனடிப்படையில் நாக்பூரைச் சேர்ந்த 50 வயது பெண்ணின் ஸ்டெம் செல் எடுக்கப்பட்டது. இதற்காக அந்த பெண் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவருக்கு சில சோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவரது ஸ்டெம் செல்லை நானே லண்டனுக்கு எடுத்துச் சென்று அங்கு தென்னாசியாவைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 வயது நபருக்கு அந்த செல்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் மாற்றப்பட்டன. அந்த மருத்துவமனையோடு நாங்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறோம் என்றார் அவர்.
புற்றுநோயின்போது ஒருவரின் உடலில் உள்ள நல்ல செல்கள் அழிகின்றன. ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இன்னொருவரின் செல்களை பாதிக்கப்பட்டவரின் உடலில் ஏற்றி, அவருக்கு புதிதாக செல்களை உருவாக்க முடியும்.
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications