முறைகேடு புகாரில் சல்மான் குர்ஷித்- ராஜினாமா செய்யக் கோரி கெஜ்ரிவால் குழு நாளை முற்றுகைப் போராட்டம்
டெல்லி: தொண்டு நிறுவனம் மூலமாக முறைகேட்டில் ஈடுபட்டதாக சல்மான் குர்ஷித் மீது அர்விந்த் கெஜ்ரிவால் குழு புகார் சுமத்தி இருக்கிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சல்மான் குர்ஷித் பதவி விலக வலியுறுத்தி நாளை அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை கெஜ்ரிவால் குழு கூறியிருந்த பரபரப்பு அடங்குவதற்குள் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தலை உருட்டப்பட்டிருக்கிறது. சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி லூயிஸ் குர்ஷித் ஆகியோர் தொண்டு நிறுவனம் மூலம் மத்திய அரசின் நிதியை பெற்று மோசடி செய்திருக்கின்றனர். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி பெறப்பட்ட நிதியை எந்த ஒரு முகாமும் நடத்தாமலேயே மோசடி செய்திருக்கின்றனர் என்பது கெஜ்ரிவால் குழுவின் புகார். இந்த முறைகேடு தொடர்பாக உடனடியாக சல்மான் குர்ஷித் மனைவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை.
சல்மான் குர்ஷித், அவரது மனைவி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி நாளை டெல்லியில் உள்ள அவரது வீடு முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications