ஜோசியர் சொல்றார்.. எதியூரப்பா செய்றார்..

சரியாக 31ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மிகச் சரியாக தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பரத்வாஜிடம் தந்தார். அந்த நேரம், அவரது ஆஸ்தான ஜோதிடர் குறித்துத் தந்த நேரமாகும்.
இந் நிலையில் விரைவில் கட்சியை விட்டு விலகப் போகிறேன் என்று கூறிக் கொண்டே இருந்த எதியூரப்பா, முதலில் ஒரு தேதியை சொன்னார், பின்னர் அதை ஒத்தி வைத்தார். இப்போது டிசம்பர் மாதம் பாஜகவை விட்டு விலகி, புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுவும் கூட ஜோதிடர்களின் ஆலோசனைப்படி தான் என்கிறார்கள். கட்சியை விட்டு விலக ஒரு நாளையும், நேரத்தையும் குறித்துத் தந்துள்ள ஜோதிடர்கள், கட்சியை ஆரம்பிக்கவும் தேதி குறித்துத் தந்துள்ளார்களாம். அதன்படியே புதிய கட்சியைத் தொடங்கவுள்ளார் எதியூரப்பா.
முன்னதாக தனது முடிவு குறித்து நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா, நான் இனியும் பாஜகவில் தொடர்ந்து நீடிக்கும் பேச்சுக்கே இடமில்லை. பாஜகவுக்கு நான் தேவை இல்லை என்று அந்த கட்சியின் தலைவர்கள் நினைக்கிறார்கள். அதனால் நான் புதிய கட்சியை தொடங்குவது 100க்கு 99 சதவீதம் உறுதி. (1 சதவீதத்தை எதியூரப்பா விட்டு வைத்திருப்பதற்குக் காரணம், தனது மிரட்டலுக்கு பயந்து கட்சித் தலைவர்கள் தனக்கு மாநில கட்சித் தலைவர் பதவியை தந்துவிடுவார்கள் என்ற நப்பாசை)
இதுதொடர்பாக எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன். வரும் டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்குகிறேன். இதற்கு முன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களிடம் விவாதித்து கருத்துக்களை கேட்டு அறிய முடிவு செய்துள்ளேன். விரைவில் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளேன் என்றார்.
எதியூரப்பாவின் கட்சியின் பெயர் ‘கர்நாடக ஜனதா கட்சி' என்கிறார்கள். கட்சிக்கு ‘சைக்கிள்' சின்னம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications