2050க்குள் பூமியின் வெப்பம் அதிகரிக்கும்-இஸ்ரோ விஞ்ஞானி எச்சரிக்கை
நெல்லை: சுற்று சூழலை பாதிக்கும் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 2050ம் ஆண்டிற்குள் பூமியின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் எச்சரித்துள்ளார்.
உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதற்கான நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மகேந்திரகிரி இஸ்ரோவின் திரவ திட்ட மையத்தின் மூத்த விஞ்ஞானி இங்கர்சால் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
சமுதாயத்திற்கு செயற்கைகோளின் பயன்பாடு மிகவும் அவசியமாக உள்ளது. ஒரு அலைவரிசையை செயற்கைகோள் மூலம் 12 கிமீ தூரத்திற்கு எடுத்து செல்ல முடியும். உலக நாடுகளில் இந்தியா மட்டுமே கல்விக்காக தனி செயற்கைகோளை விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது.
உலகில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டுமே சுயமாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சுற்றுப்பாதையில் வலம் வர செய்து பின்னர் மீண்டும் கீழே வர செய்கின்றன.
கடந்த 200 ஆண்டுகளில் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஓசோன் மண்டலம் பாதிக்கப்பட்டு வெப்பநிலை உயர்ந்து வருகிறது. வரும் 2050ம் ஆண்டிற்குள் வெப்பம் மேலும் அதிகரித்து, மழை சீராக இருக்காது. இதனால் உலகில் வறட்சி அதிகரிக்கும். பருவம் தவறி ஓரே நாளில் அதிக மழை பெய்யும் போது, அழிவு ஏற்படும். மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில் விவசாய நிலங்களை பெருக்க வேண்டும்.
ஆனால் குறைந்து வருவதால் உணவு, தண்ணீர் பற்றாக்குறை உருவாகும். செல்போன் டவர்களால் கதிர்வீச்சு அதிகரித்துள்ளது. நான் சிறு வயதில் பார்த்த பறவைகளை தற்போது பார்க்க முடியவில்லை.
காடுகள் பெருவதற்கு பதில் காடுகள் அழிப்பு தான் அதிகமாகி வருகிறது. இயற்கை வளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை பெருகி வரும் நேரத்தில் விண்வெளி தொழில்நுட்பம் முக்கிய இடம் பிடிக்கும் என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications