கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி நிறுவனத்தின் 13 பஸ்கள் பறிமுதல்

தமிழக அரசிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பி.ஆர்.பழனிச்சாமி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தலைமறைவாக உள்ள அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட கிரானைட் அதிபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை மாட்டுத்தாவணியில் உள்ள பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 13 பேருந்துகளை பறிமுதல் செய்தனர். கிரானைட் ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தா வேஜூக்களை கடத்தவும் இந்த பேருந்துகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையில் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சொத்துக்கள் முடக்கம்
கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் ஏற்கனவே சோதனை நடத்தி கிரானைட் தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
பி.ஆர்.பழனிச்சாமிக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் முதற்கட்டமாக 13 பேருந்துகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications