சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காரசார விவாதம்-கமிஷனரை கண்டித்து செய்தியாளர்கள் வெளிநடப்பு
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், கமிஷனர் ஜார்ஜை கண்டித்து, செய்தியாளர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஐ.சி.எப். பகுதியில் மாணவன் ஒருவன் கடத்தப்பட்டு ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே நக்சல்கள் உள்ள பகுதியில் இருந்து மீட்கப்பட்டான். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மாலை நடைபெற இருந்தது. இதில் கமிஷனர் ஜார்ஜ், செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
சென்னையின் புதிய கமிஷனராக ஜார்ஜ் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இது. இதனால் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்பு, மாலை 5 மணி அளவில் செய்தியாளர்கள் கூடினர்.
அப்போது கமிஷனர் ஜார்ஜ், எனக்கு முன்னால் உள்ள மைக்கை எடுத்து விடுங்கள். எதையும் வைக்க வேண்டாம், புகைப்படமும் எடுக்க வேண்டாம் என்று கூறினார். இதை ஏற்று வீடியோ கேமராமேன்களும், ஸ்டில் கேமராமேன்களும் வெளியேற்றினர்.
இந்த நிலையில் இது குறித்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜூம், செய்தியாளர்களும் கருத்து பரிமாற்றம் செய்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜெயா டிவி நிருபர் தலைமையில் அனைத்து செய்தியாளர்களும் வெளிநடப்பு செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனைத்து செய்தியாளர்களும் வெளிநடப்பு செய்வது இதுவரை முதல் முறையாகும்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications