மாணவியின் சாவில் மர்மம்: கல்லூரி முன் போராட்டம்-49 மாணவர்கள் கைது
நாமக்கல்: நாமக்கலில் கல்லூரி மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி சட்ட கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 49 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது விவேகானந்தா கல்வி நிறுவனம். இங்கு படித்து வந்த காய்த்ரி என்ற மாணவி, கடந்த மாதம் உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இறந்த மாணவியின் பெற்றோரும், ஆதிதமிழர் பேரவை போன்ற சில அமைப்பினரும் சேர்ந்து கொண்டு, காய்த்ரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டி, போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மாணவியின் சாவு குறித்த மர்மம் நீடிப்பதால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்லூரி முன் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரையும் மீறி சென்று கல்லூரிக்கு பூட்டு போட்டு போராட்ட நடத்த முயன்ற 49 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications