ஆசிரியர் தகுதி தேர்வு குறுக்கீடு- வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதி மாற்றம்!
சென்னை: வரும் 14ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளதால், அன்று நடைபெற இருந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறாது. அதற்கு பதிலாக வரும் 28ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வரும் 2013ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை செய்ய மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக கடந்த 7ம் தேதி, வரும் 14 மற்றும் 21ம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 7ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த நிலையில் அடுத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ள வரும் 14ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதனால் அன்று நடைபெற உள்ள சிறப்பு முகாம் வரும் 28ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications