அணுஉலை விவகாரம்: உதயகுமார் சவாலை ஏற்றது சரத்குமார் கட்சி!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் துவங்க கோரியும், வாகனப் பேரணியும், பொதுமக்கள் விழிப்புணர்வு பெற 5 லட்சம் புத்தகங்கள் வழங்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்தார்.
தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அங்கு உற்பத்தி செய்யப்பட உள்ள ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவரது கோரிக்கையை மத்திய பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் கூறியிருந்தார்.
மேலும், நாட்டு மக்களின் நலன் கருதி போராட்டக் குழுவினரும் அப்பகுதி மக்களும், மாநில மத்திய அரசின் மீது நம்பிக்கை கொண்டு, தமிழகம் ஒளி பெற கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனால் போராட்ட குழுவினர் கடும் கோபம் கொண்டு, சரத்குமார் மீது கடும் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கடும் விமர்சனம் செய்தனர். இதற்கு அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சுப.உதயகுமார் உருவ பொம்பையை எரித்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சரத்குமாருக்கு ஒரு அவமரியாதை, அவமானம் என்றால் எந்த தொண்டனும் ஏற்கமாட்டான். எனவே சுப.உதயகுமாரின் சவாலை நாங்கள் ஏற்கிறோம். பொது மேடையை நாங்கே ஏற்படுத்தி தருகிறோம். மக்களை கூட்டுகிறோம். அந்த மேடைக்கு உதயகுமார் வரட்டும். எங்கள் தலைவர் பேச்சை எதிர்கொள்ளட்டும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications