இன்று முதல் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை முன்னறிவிப்பு- சென்னைக்கு மட்டும்!

தற்போது டெல்லி, ஜெய்ப்பூர், சண்டிகர், லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள வானிலை ஆய்வு மையங்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை ஆய்வு மையத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. சென்னையில் அப்படி இல்லை. 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே தகவல் சொல்லப்படும்.
ஆனால் இன்று முதல் சென்னை மையமும், 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை முன்னறிவிப்பை வெளியிட ஆரம்பித்துள்ளது. இந்தத் தகவலை www.imdchennai.gov.in என்ற இணையதளத்திற்குப் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.
வட கிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மழை வருமா, வராதா என்பதை இந்த இணையதளத்திற்குப் போய் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் முன்னறிவிப்பு என்ன?
இந்த புதிய திட்டத்தின்படி கடைசியாக 2.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அப்டேட் கொடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் வெப்ப நிலை 32 முதல் 33 டிகிரி செல்சியசாக இருந்தது. வட கிழக்குக் காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தில் இருந்தது. தென் சென்னையின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ இருக்கலாமாம். வானிலையில் வேறு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த அப்டேட் 5.30 மணிக்கு தரப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications