நீச்சல்குளத்தில் சிறுவன் மூழ்கிப் பலி .. பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வருக்கு முன் ஜாமீன்!
சென்னை: பள்ளிக்கூடத்தில் கட்டப்பட்ட சட்டவிரோதமான நீச்சல் குளத்தில் மாணவன் ஒருவன் மூழ்கிய சம்பவத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளிக்கூட முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மீண்டும் முன்ஜாமீன் கிடைத்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ளது பத்மா சேஷத்திரி பாலபவன் உள்ளி. இப்பள்ளியை நிறுவியர் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி. இந்தப் பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த வழக்கில் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி மீது வழக்கு இதுவரை பதிவாகவில்லை. அதேசமயம், முதல்வர் ஷீலா ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது சாதாரணப் பிரிவில் முதலில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து உடனே ஜாமீனிலும் அனைவரும் வெளியாகி விட்டனர். முன்ஜாமீனும் பெற்றனர்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது போலீஸாரிடம் விளக்கம் கேட்டது உயர்நீதிமன்றம். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 304 (2) கவனக்குறைவால் கொலைக்குக் காரணமாக இருந்த குற்றமாக பதிவு செய்யப்பட்ட வழக்கினை, 304 (ஏ) பிரிவின் கீழ் மாற்றி பதிவு செய்தனர்.
இதையடுத்து மீண்டும் பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை ஏற்று இருவருக்கும் உடனடியாக முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சென்னை சேலையூர் ஜியோன் பள்ளி விவகாரத்தில் படு வேகமாக செயல்பட்ட போலீஸார், பள்ளி தாளாளர் முதல் சம்பந்தப்பட்ட பஸ்ஸின் டிரைவர் வரை அத்தனை பேரையும் ஓவர்நைட்டில் கைது செய்து சிறையிலும் தள்ளி துரிதமாக செயல்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications