வடகிழக்கு பருவமழை 18ம் தேதி துவங்குமாம்: வானிலை ஆய்வு மையம் சொல்கிறது
சென்னை: தென்மேற்கு பருவமழையின் மூலம் தமிழகம் ஏமாற்றம் அடைந்த நிலையில், வரும் 18ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். இன்னும் ஒரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை முடிவடையலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, வடகிழக்கு பருவமழை வரும் 18 அல்லது 19ம் தேதி துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது,
தெனமேற்கு பருவமழை ஓரிரு நாட்களில் முடிவடையும் அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் வரும் 18 அல்லது 19ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய துவங்கும். அதன்பிறகு பருவ மழை தீவிரமடைந்து, மாநிலம் முழுவதும் மழை பெய்யும். இந்த மாதம் துவங்க உள்ள வடகிழக்கு பருவ மழை, வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
லட்சத்தீவின் மேல் உள்ள மேகங்களின் மேற்பரப்பில் நீர் திவலைகள் உள்ளன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னும் 24 மணி நேரத்திற்கு இந்த மழை நீடிக்கும் என்றார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications