இங்கிலாந்திலிருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடாகுமா?: 2014-ல் வாக்கெடுப்பு!
Subscribe to Oneindia Tamil

ஸ்காட்லாந்து தனிநாடாவது தொடர்பாக கருத்துக் கணிப்பை நடத்த இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் ஸ்காட்லாந்தின் முதல்வர் அலெக்ஸூம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த 305 ஆண்டுகளாக ஸ்காட்லாந்து இங்கிலாந்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. தற்போது ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிய வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்து வருவதால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
வாக்கெடுப்பில் கூட, "ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் வேண்டுமா? இல்லையா?- ஆம்- இல்லை" என்ற ஒரு வரி கேள்வி மட்டும் இருக்கும். இதற்கு வாக்களிக்க வேண்டும். இந்த வாக்கெடுப்பில் 16 வயது இளைஞர்களும் கலந்து கொள்ளலாம்.
இருப்பினும் இங்கிலாந்துடன் இருப்பதையே ஸ்காட்லாந்து மக்கள் விரும்பக் கூடும் என்று தான் எதிர்பார்ப்பதாக கேமரூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications