ராகுலுக்கு எதிரான பாலியல் புகார்களை டிஸ்மிஸ் செய்த சுப்ரீம் கோர்ட்-சிக்கலில் முலாயம், அகிலேஷ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீதான பாலியல் பலாத்காரம், கடத்தல் ஆகிய புகார்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும், இந்த விவகாரத்தில் இப்படிப் புகார்களைக் கூறுமாறு முலாயம் சிங் யாதவும், அகிலேஷ் யாதவும் தூண்டி விட்டார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு சிபிஐக்கும் உத்தரவிட்டுள்ளது.

''கடத்திக் கற்பழித்தார் ராகுல்''

''கடத்திக் கற்பழித்தார் ராகுல்''

ஒரு பெண்ணை ராகுல் காந்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றம் சாட்டி அலகாபாத் கோர்ட்டில் கிஷோர் சம்ரிதே என்பவர் உள்ளிட்ட 2 பேர் வழக்குத் தொடர்ந்தனர்.

யார் கொடுத்த புகார் இது?

யார் கொடுத்த புகார் இது?

புகார் கொடுத்த சம்ரிதே, முன்னாள் சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ ஆவார். ராகுல் காந்தி, தனது அமேதி தொகுதியில் ஒரு பெண்ணை நைச்சியமாகப் பேசி வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இவர்கள் இருவரும் கூறியிருந்தனர்.

அப்பட்டமான பச்சைப் பொய்- ராகுல் மறுப்பு

அப்பட்டமான பச்சைப் பொய்- ராகுல் மறுப்பு

இந்தப் புகாரை ராகுல் காந்தி அப்பட்டமாக மறுத்திருந்தார். இது அப்பட்டமான பச்சைப் பொய், எள்ளளவும் உண்மை இல்லை. தனது பெயரை இந்த வழக்கு கெடுத்து விட்டதாக அவர் கூறியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் முதல் கொட்டு!

உயர் நீதிமன்றத்தில் முதல் கொட்டு!

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மனுதாரர்கள் இருவருக்கும் தலா பொய் வழக்குப் போட்டதற்காக தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்தது.

முலாயம், அகிலேஷை பிடித்து விசாரியுங்கள்.. உச்ச நீதிமன்றம்

முலாயம், அகிலேஷை பிடித்து விசாரியுங்கள்.. உச்ச நீதிமன்றம்

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றம் போனார்கள். அங்கு மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. ராகுல் மீதான புகாரில் சற்றும் உண்மை இல்லை. இந்தப் புகார்களைத் தெரிவிக்குமாறு முலாயம் சிங்கும், அகிலேஷ் யாதவும் தூண்டி விட்டார்களா என்பதை விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

அப்பா முலாயமுக்கும், மகன் அகிலேஷுக்கும் சிக்கல்...

அப்பா முலாயமுக்கும், மகன் அகிலேஷுக்கும் சிக்கல்...

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பால் முலாயம் சிங் யாதவும், அகிலேஷும் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். இருவரும் சேர்ந்து தங்களது கட்சிக்காரரைத் தூண்டி விட்டதாக நிரூபணமானால் இவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம். ஏற்கனவே இருவரும் சொன்னதால்தான் வழக்குப் போட்டேன் என்று சம்ரிதே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

காங்கிரஸ்- சமாஜ்வாடி உறவு என்னாகும்?

காங்கிரஸ்- சமாஜ்வாடி உறவு என்னாகும்?

ராகுல் காந்தி மீதான பாலியல் பலாத்கார புகார் சர்ச்சையில் முலாயம் சிங்கும், அகிலேஷும் சிக்கியுள்ளதால், அவர்களது சமாஜ்வாடிக் கட்சிக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவு கசந்து முறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+