கத்காரிக்கு எதிராக பேச கெஜ்ரிவால் குழு வற்புறுத்தியது- நாக்பூர் விவசாயி அதிரடி தகவல்
நாக்பூர்: பாஜக தலைவர் நிதின் கத்காரிக்கு எதிராக புகார் கூறுமாறு தம்மை கெஜ்ரிவால் குழு கட்டாயப்படுத்தியதாக நாக்பூர் விவசாயி கடாகே பரபரப்பாக தகவலை வெளியிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் உமிரத் தாலுகாவில் புதிய அணை கட்ட 100 ஏக்கர் நிலத்தை அம்மாநில முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார், பாஜக தலைவர் நிதின்கத்காரிக்கு விதிமுறைகளை மீறி கொடுத்தார் என்பது கெஜ்ரிவால் குழுவின் புகார். இதற்கு சாட்சியாக கடாகே என்ற விவசாயியின் பெயரையும் கெஜ்ரிவால் குழு பயன்படுத்தியத்துடன் அவரைக் காணவில்லை என்றும் கூறினர்.
ஆனால் விவசாயி கடாகே இதை முழுமையாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த நாடகங்கள் அனைத்திற்கும் கெஜ்ரிவாலுடன் இருக்கும் அஞ்சலி தமானியா என்னும் பெண்மணிதான் காரனம். எனது பயன்படுத்தப்படாத நிலத்தை பாசனத்துறை மூலமாக நான் கத்காரிக்கு குத்தகைக்கு அளித்தேன். எனக்கும், கத்காரிக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது நிலத்தை திருப்பிக் கேட்டு பாசனத்துறைக்கு நான் விண்ணப்பித்தேன். இதனைக் கேள்விப்பட்ட தமானியா, இதனை அரசியல் ஆக்கிவிட்டார். கத்காரிக்கு எதிராக பேசுமாறு அவர் நிர்பந்தித்தார் என்று அதிரடியாக அம்பலப்படுத்திவிட்டார். ஊடகங்களுக்கு பயந்துதான் நான் ஒளிந்திருந்தேனே தவிர வேறு எங்கும் செல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் விவசாயி கடாகேயின் இந்த புகாரை கெஜ்ரிவால் குழுவைச் சேர்ந்த அஞ்சலி தமானியா மறுத்திருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications