மனைவி அழகாக இல்லை என்று காதலியோடு சுற்றிய பேராசிரியையின் கணவர் கைது
சென்னை: மனைவி அழகாக இல்லை என்று காரணம் காட்டி, காதலியோடு உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்ட கணவன் மீது புதுச்சேரி கல்லூரி பேராசிரியை புகார் அளித்தார். இதன் பேரில் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் இஸ்ரேல் விவேக் பிரசாத்(33). இவரது மனைவி மேரி சத்திய சுந்திரி(32). இவர் புதுச்சேரியில் கல்லூரி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மேரி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கு திருமணமான நாளில் இருந்து கணவர், என்னை சித்ரவதை செய்து வருகிறார். நான் அழகாக இல்லை என்றும், குள்ளமாகவும், கறுப்பாகவும் இருப்பதாகவும் கூறி அடிக்கடி குத்தி காட்டுவார்.
திருமணத்தின் போது அவர் எம்எஸ்சி படித்திருப்பதாக கூறினார். ஆனால் +2 தான் படித்துள்ளார். மேலும் திருமணத்தின் போது வரதட்சணை எதுவும் வேண்டாம் என்றார். ஆனால் இப்போது 10 சவரன் நகைகளும், ரூ.2 லட்சம் பணமும் தர வேண்டும் என்கிறார்.நான் வாங்கும் சம்பளம் அனைத்தையும் அவரிடம் தான் தர வேண்டும் என்றும், சித்ரவதை செய்கிறார். என்னை படுக்கை அறைக்குள் அனுமதிப்பதில்லை, வெளியறையில் தான் நான் தூங்க வேண்டும்.
எப்படியோ அவரோடு சில காலம் வாழ்ந்த நான் கருவுற்றேன். அந்த கருவையும் கலைக்க வற்புறுத்தினார். குழந்தை என்னை போல கறுப்பாக பிறந்துவிடும் என்று அவர் சொன்னார். அவர் உச்சகட்டமாக சமையல் கியாசை திறந்துவிட்டு என்னை கொல்ல பார்த்தார்.
இப்போது எனது கணவர், அவரது காதலியோடு உல்லாசமாக இருக்கிறார். ஒரு பக்கம் என் உயிருக்கு ஆபத்து. இன்னொரு பக்கம் எனது வாழ்க்கையை இன்னொரு பெண் பகிர்ந்து கொண்டுவிட்டார். இதனால் நான் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறி, என் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனவே எனது கணவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இப்புகாரின் மீது சென்னை எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரியமாலா வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இது தொடர்பாக இஸ்ரேல் விவேக் பிரசாத் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார், இஸ்ரேல் விவேக் பிரசாத்திடம் விசாரித்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications