ஓடிப் போன மனைவி.. உயிரை விட்டார் கணவர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு மனைவி ஓடிப் போனதால் மன வருத்தமடைந்த கணவர் விஷத்தைச் சாப்பிட்டு உயிரை விட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (42). லாரி டிரைவரான இவரது மனைவி வெள்ளையம்மாள். 37 வயதாகும் வெள்ளையம்மாளுக்கு மகன், மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி விட்டது.
சில நாட்களுக்கு முன்பு வெள்ளையம்மாள் காணாமல் போய் விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் மாரியப்பன். அதில் தனது மனைவி வெள்ளையம்மாளை 12ம் தேதி மாலை முதலே காணவில்லை. அவருக்கும், சுப்பையா என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்தது. அவருடன் ஊரை விட்டு ஓடி விட்டார். கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டது போலத் தெரியவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரியப்பன் விஷம் குடித்து விட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.
இதுகுறித்து மாரியப்பனின் மகன் சரவணன் போலீஸில் புகார் கொடுத்தார். இதை பதிவு செய்த போலீஸார் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications