கனமழையால் உதகை, கொடைக்கானலுக்கான போக்குவரத்து கடும் பாதிப்பு

மலை ரயில்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் குன்னூரிலிருந்து-உதகை செல்லும் நீலகிரி மலை ரயில்சேவை பாதிக்கப்பட்டது. மண் சரிவுகள் அகற்றப்பட்ட பின்பு 5 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. மஞ்சூரில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆதி
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் பிரதான சாலையில் மரம் விழுந்து கிடப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. பழனி- கொடைக்கானல் சாலையிலும் நிலச்சரிவு மற்று போக்குவரத்து பாதிப்பு அபாயம் இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
நிரம்புகள் அணைகள்- ஏரிகள்
கன மழை காரணமாக கடலூரில் உள்ள பெருமாள் ஏரி, வெலிங்டன் ஏரி, வாலாஜா ஏரிகள் நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஏரியின் நீர் மட்டம் 44.70 அடியாக உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 6 அடியும், கடனாநதியின் நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாகக் குறைந்துவருகிறது. சனிக்கிழமை விநாடிக்கு 4,303 கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழணை மாலை விநாடிக்கு 3,124 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீர்மட்டம் 63.53 அடியாக இருந்தது. பாசனத்துக்கு 1,087 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications