'ஸ்பெக்ட்ரம்' ராசா டிவி சேனல் தொடங்குகிறார்?
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி திகார் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்துள்ள ஆ.ராசா டிவி சேனல் தொடங்கும் முடிவில் இருக்கிறாராம். இதற்காக கருணாநிதியிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைப்புச் செய்தியில் வரணும்
என்னதான் பிரபலமாக இருந்தாலும் தினசரி டிவி செய்தியிலோ, பேப்பரிலோ தலைப்புச்செய்தியாக வரவேண்டும் என்பது சிலருக்கு ஆசை. கடந்த சில ஆண்டுகளாக தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருப்பவர் முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா.

ராசா புகழ் பரப்பும் சேனல்
இந்தியாவில் உள்ள அனைத்துச் சேனல்களிலும் வட்டம் கட்டி இவரைப் பற்றி செய்தி போட்டாலும் தன்னைப் பற்றி சன்டிவியிலோ, கலைஞர் டிவியிலோ நல்லவிதமாய் செய்தி வரவில்லையே என்ற ஏக்கம் நீண்டநாட்களாய் இருக்கிறது. அதனால் தன்புகழ் பரப்ப தனக்காக ஒரு டிவி சேனலை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதியிடம் பேசிய ராசா
தன் தரப்பு நியாயங்களை சொல்ல மீடியாக்களின் துணை இல்லாமல் தவிக்கும் ஆ.ராசா இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசியிருக்கிறார். ''சன் டி.வி. என்னை எப்போதுமே புறக்கணிக்கும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், கலைஞர் டி.வி.யும் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறது. நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அத்தனை மீடியாக்களும் என்னிடம் தனி இன்டர்வியூ கேட்டு துரத்தினார்கள். ஆனால் கலைஞர் டிவியும், சன் டிவியும் கண்டு கொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

மக்களிடம் சென்ற பேட்டி
சிறையில் இருந்து வந்த உடன் புதிய தலைமுறைக்கும் என்.டி.டி.வி.க்கும் மட்டுமே ராசா பேட்டி கொடுத்தார். அந்த பேட்டிகள் என்னை பெரிய அளவுக்கு மக்களிடத்தில் சேர்ந்ததாக ராசா கூறியிருக்கிறார் ஆனால், கலைஞர் டி.வி.யில் இன்றுவரை என்னிடம் யாரும் பேட்டி கேட்கவில்லையாம்.

கருணாநிதி ஒகே சொன்னால் போதும்
கருணாநிதி ஒகே சொன்னால் இப்போதே தனி சேனல் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ராசா தனது ஆதரவாளர்களிடம் கூறிவருகிறார். சன், கலைஞர் டி.வி.க்களை விட தன்னுடைய சேனல் தி.மு.க.வின் கொள்கை முழக்க தளமாக விளங்கும்!"என கருணாநிதியிடம் ஆ.ராசா விரிவாக பேசியிருக்கிறாராம்.

சீக்கிரம் செய்திச் சேனல்
ராசாவின் இந்த டீலிங் கருணாநிதிக்கு பிடித்திருப்பதால், சீக்கிரமே ஒரு செய்தி சேனல் தமிழ் உலகுக்கு புதிதாக வர இருக்கிறது. அதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்யத் தொடங்கிவிட்டார் ஆ.ராசா. டெல்லியில் இருக்கும் மீடியா ஆட்கள் சிலரின் துணையோடு பக்கா செட்டப்பில், பரபரப்பு, விறுவிறுப்பு என ஆங்கில சேனல்களுக்கு நிகரான சேனலாக ராசாவின் சேனல் இருக்குமாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications