என்னுடைய 'ரெக்கமண்டேஷனை' மேலிடம் ஏற்கவில்லை... அழகிரி குமுறல்

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற முறையில், மதுரை மாநகர், மாவட்டம், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனத்தில் என்னுடைய பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பதவி கிடைக்காதவர்களும் இன்று என்னை சந்தித்தனர். அதே போல் மற்ற மாவட்டங்களிலும் என்னுடைய பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
திமுகவினர் மீது இந்த அரசு தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு வருகிறது. பழிவாங்கும் நடவடிக்கை ஒன்றைத்தான் அரசின் நிர்வாகம் செய்து கொண்டு இருக்கிறது. மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.
ஜப்பான் நாட்டிற்கு நான் சென்று வந்த பிறகு, அங்குள்ள பல நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டின. அந்த வகையில் மேற்கு வங்காள மாநிலத்தில் புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டம் தொடங்குவதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தமிழக அரசு இன்னும் அனுமதி தரவில்லை. புதிய திட்டங்களை தொடங்குவதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை.
மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்குவதற்காக கடந்த திமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். திட்டப்பணிகளும் தொடங்கின. ஆனால் அதிமுகவினர் அதை தங்கள் திட்டம் போல் அறிவித்து அடிக்கல் நாட்டி வருகின்றனர்.
மேலூரில் கிரானைட் பாலிஷ் போடும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடந்தன. தற்போது அந்த பணிகள் முடங்கி போய் உள்ளன. மதுரை நகரை சுகாதாரமாக பராமரிக்க 18 இடங்களில் நவீன இலவச கழிப்பறைகள் எனது முயற்சியால் கட்டப்பட்டன. தற்போது அவை அனைத்தும் கட்டணக் கழிப்பிடங்கள் ஆக்கப்பட்டு விட்டன.
தமிழகத்தின் மின்பற்றாக்குறையை தீர்க்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? நேரடியாக சந்தித்து வலியுறுத்த வேண்டாமா? மத்திய அரசிடமும் போதிய அளவு மின்சாரம் இல்லை. எனவே கூடங்குளம் போன்ற திட்டங்கள் செயல்படும் போது தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும் என்றார் அவர்.
சமீபத்தில் மு.க.ஸ்டாலின் தனது மகன் மற்றும் மருமகனுடன் மதுரைக்கு நேரில் வந்து அழகிரியை சந்தித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications