சென்னையில் வரும் 29ம் தேதி முற்றுகை போராட்டம்: கூடங்குளம் போராட்ட குழுவினர்
சென்னை: கூடம்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில், வரும் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ளுமாறு, கூடங்குளம் பேராட்ட குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான பேராட்ட குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நம் தொப்புள்கொடி உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, டெல்லியின் ஊமை நாயகி ஒன்றும் அறியாதது போல் ஒதுங்கி இருந்தாள். உடனிருந்த இனத்துரோகிகள் முதுகுவலி, உண்ணாவிரதப் படம் காட்டினர்.
தமிழரின் வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள், வருங்கால சந்ததியர் அழித்தொழிக்கப்படும் நிலையில், அழுது புலம்பிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் கூட்டம் செயற்கை மின்வெட்டை மிகைப்படுத்தி அடிக்கின்றார்.
துரோகிகள் முதுகில் குத்த, எதிரிகள் நெஞ்சைக் கிழிக்க, எடுபிடிகள் வயிற்றில் அடிக்க, என்ன செய்யப் போகிறாய் தமிழினமே? ஏதாவது செய்ய வேண்டும் என்றால் எழுந்து வா சென்னைக்கு. அக்டோபர் 29 அன்று காலை 10 மணிக்கு சட்டசபை முற்றுகையில் சந்திப்போம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications