நேத்து எத்தனை அடி, இன்னிக்கு எத்தனை... இதைத்தான் விஜயகாந்த்திடம் நாம் பார்க்கனும்!
சென்னை: இன்னிக்கு எத்தனை அடி, நேத்து எத்தனை அடி. நேற்றை விட இன்று 2 அடி குறைவாக வந்ததா, அது அத்தனையும் நமக்கு லாபம். இதைத்தான் நாம பார்க்கனும். அதை விட்டுட்டு அடிச்சுட்டாங்க, அடிச்சுட்டாங்கன்னு வருத்தப்படக் கூடாது. வடிவேலு ஒரு படத்தில் பேசிய இந்த வசனம் விஜயகாந்த்தைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பொருந்தும்.

ஸ்ரீரங்கத்தில் ரசிகருக்கு தர்ம அடி
விஜயகாந்த் அடிப்பதும், திட்டுவதும், நாக்கைத் துருத்துவதும் புதிதல்ல. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு தர்மபுரி பட ஷூட்டிங்குக்காக ஸ்ரீரங்கம் போயிருந்தபோது தன்னை ஆர்வ மிகுதியால் பார்க்கத் துடித்த ரசிகரையே சரமாரியாக அடித்துத் தள்ளியவர் விஜயகாந்த்.

வேட்பாளரையே வெளுத்துக் கட்டியவர்
சட்டசபைத் தேர்தலின்போது பாஸ்கர் என்ற தனது கட்சி வேட்பாளரின் பெயரை மாற்றிச் சொல்லி கட்சியினர் மத்தியிலேயே கேலிக்குள்ளானபோது, கடும் ஆத்திரம் ஏற்பட்டு தனது தவறை மறந்து, அண்ணே என் பேரை மாத்திச் சொல்லிட்டீங்க என்று அப்பாவியாக சுட்டிக்காட்டிய வேட்பாளரையே வேனுக்குள்ளேயே வைத்து மக்கள் மத்தியில் வெளுத்துக் கட்டியவர் விஜயகாந்த்.

சட்டசபையில் நாக்கைத் துருத்தி ..
சட்டசபையில் அதிமுகவினரின் பேச்சால் கோபமடைந்து, கொந்தளித்து நாக்கைத் துருத்தியும், கை முஷ்டியை மடக்கிக் காட்டியும், வெளியே வாடா என்றும் பேசி புதிய வரலாறு படைத்தவர் விஜயகாந்த்.

விமான நிலையத்தில் தகராறு
நேற்று சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய பேச்சு, உபயோகித்த வார்த்தைகள், ஒரு நாகரீகமான அரசியல் தலைவருக்குரியதா என்பதை விஜயகாந்த்தே யோசித்துப் பார்த்துச் சொல்ல வேண்டும்.

கோபம் புதிதல்ல
விஜயகாந்த்தும், கோபமும், ஆத்திரமும் ஒட்டிப் பிறந்தவை. வெளியிலேயே இப்படி நடந்து கொள்ளும் விஜயகாந்த், கட்சிக் கூட்டத்திற்குள்ளேயும் கூட பலமுறை தனது கட்சியினரை, ஏன் மூத்த தலைவர்களையே கடுமையாக சாடியும், சிலரை அடித்தும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கட்சியினரே கூறுகிறார்கள்.
விஜயகாந்த் நல்ல தலைவராக மாறுவாரா என்பதை அவரது நடத்தைதான் இனி நிரூபிக்க வேண்டும்!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications