பெண்கள் தீவிரவாத அமைப்பை உருவாக்குகிறது அல்-கொய்தா இயக்கம்
லண்டன்: தீவிரவாத தாக்குதலின் மூலம் உலக மக்களை பீதிக்குள்ளாக்கிய அல்-கொய்தா இயக்கம், தற்போது பெண்களுக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சி அளித்து, பர்தா படை என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கி வருகிறது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தி உலக மக்களை பீதிக்குள்ளாக்கிய இயக்கம் அல் கொய்தா. இந்த நிலையில் அமெரிக்கப் படைகள், அல் கொய்தா இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்து, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் களமிறங்கியது.
தற்போது மறைமுகமாக செயல்பட்டு வரும் அல் கொய்தா அமைப்பு, அவ்வப்போது பீதியை கிளப்பும் வீடியோக்களை வெளியிட்டு உலக நாடுகளை மிரட்டி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த பர்தா அணிந்த பெண்கள் பலருக்கும் ஆயுத பயிற்சி அளிப்பது காட்டப்பட்டுள்ளது.
செசன்யா நாட்டில் இயங்கி வரும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த பெண்களின் முகங்கள் மற்றும் உடல்கள் பர்தா மூலம் மறைக்கப்பட்டுள்ளது. இப்பெண்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து மற்ற நாடுகளில் தாக்குதலை நடத்த அல் கொய்தா தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
வெளிநாட்டு பாதுகாப்பு படைகளுக்கு சந்தேகம் வராத வகையில், மற்ற நாடுகளின் பகுதிகளில் ஊடுருவி செல்ல இந்த பெண்களை பயன்படுத்த உள்ளனர். தீவிரவாத இயக்கங்களில் பெண்கள் இடம் பெறமாட்டார்கள் என்பதால், பாதுகாப்பு படையினருக்கு இவர்களின் மீது சந்தேமும் வராது.
இதன்மூலம் வெளிநாட்டு ராணுவ தளங்கள், அரசு அலுவலங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த, இனி அல்-கொய்தா பெண்களை கொண்ட குழுவை தான் பயன்படுத்த உள்ளதாம். ஆயுத பயிற்சி அளிக்கப்பட்ட பெண் தீவிரவாதிகளை கொண்டு இந்த படைக்கு, பர்தா படை என்ற பெயரிடப்பட்டுள்ளது.
பர்தா படையை சேர்ந்த பெண்களுக்கு சாதாரண துப்பாக்கிகள், மிஷின்கன், ராக்கெட் லாஞ்சர் மற்றும் நவீன ஆயுதங்களை கையாள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள பெரும்பாலான பெண்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications