மரண தண்டனையை குறைக்கக் கோரும் கொலையாளிகள் லிஸ்ட் வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்!

கருணை மனுக்கள் பற்றிய தகவல்களை அனைவரும் அறியும் வகையில் குடியரசுத் தலைவரின் செயலக இணையதளமான http://rashtrapatisachivalaya.gov.in- ல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் நிலுவையில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட 18 பேரின் கருணை மனு தற்போது குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யார் யார்?
கருணை மனு விண்ணப்பித்திருக்கும் தூக்குத் தண்டனை கைதிகள் விவரம்:
1. கர்மீத்சிங்: தமது குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது தூக்கு தண்டனையை 2005-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அவர் தாக்கல் செய்த கருணை மனுவை உள்துறை அமைச்சகம் பரிசீலித்து 2009-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
2. தர்மபால்: கற்பழிப்பு வழக்கில் பிணையில் வந்த இவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது தூக்கை உச்சநீதிமன்றம் 1999-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதன் பின்னர் இவர் விண்ணப்பித்த கருணை மனுவை உள்துறை அமைச்சகம் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
3. சுரேஷ் , ராம்ஜி: சொத்து தகராறில் உறவினர்கள் 5 பேரை கொலை செய்தவர்கள் இவர்கள். இருவருக்கும் 2001-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இருவரும் விண்ணபித்த கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
4. சைமன், ஞானபிரகாஷ், மாதையா, பிலவந்த்ரா: கண்ணிவெடி மூலம் 22 பேரை கொன்ற வழக்கில் 4 பேருக்கும் 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இவர்களது கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது
5. பிரவீன்குமார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்ற வழக்கில் இவரது தூக்கு ண்டனையை 2003-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. பின்னர் இவர் தாக்கல் செய்த கருணை மனுவை பரிசீலித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது உள்துறை அமைச்சகம்.
அப்சல் குரு
6. அப்சல் குரு: நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணமான அப்சல் குருவின் தூக்கு தண்டனையை 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அப்சல் குருவின் கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
7. சாய்பன்னா நிங்கப்பா நதிகர்: மனைவியையும் மகளையும் கொன்ற இவரது தூக்குத் தண்டனையை 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இவர் தாக்கல் செய்த கருணை மனுவையும் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதியன்று உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறது.
8. ஜாபர் அலி: தமது மனைவி மற்றும் 5 மகள்களைக் கொலை செய்த வழக்கில் 2004-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி இவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இவரது கருணை மனு கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு நவம்பர் 3-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
9. சோனியா, சஞ்சீவ்: சொத்து தகராறில் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்ப்பட வழக்கில் இவர்களுக்கு 2007-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இவர்களது கருணை மனு பரிசீலிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
10. சுந்தர் சிங்: இவரது சகோதரர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் இவரது தூக்கை உறுதி செய்ய இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவரது கருணை மனு குடியரசுத் தலைவருக்கு வந்து சேர்ந்தது.
11. அத்பீர்: சொத்து தகராறில் வளர்ப்பு தாய், சகோதரி, சகோதரன் ஆகியோரை கொன்ற வழக்கில் 2010-ல் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இவரது கருணை மனு கடந்த ஜூன் மாதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அஜ்மல் கசாப்
12. அஜ்மல் கசாப்: மும்பை தாக்குதலில் பிடிபட்ட ஒரே பாகிஸ்தான் தீவிரவாதி. 166 பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்தவன். இந்தியாவின் மீது போர் தொடுத்த வழக்கில் கடந்த ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் கசாப்பின் தூக்கை உறுதி செய்தது. இவனது கருணை மனு கடந்த 16-ந் தேதிதான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications