நிலம் புயல் எதிரொலி: இருளில் மூழ்கும் தமிழகம்?

சென்னைக்கு அருகே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்பொழுது நிலம் புயலாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இம்மழையால் நெய்வேலி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரி சுரங்கங்களில் நீர் தேங்கி இருப்பதால் நிலக்கரி வெட்டி எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது புயல் கரையை கடக்கும் நிலையில் மழை தீவிரமடையும். இதனால் நிலக்கரி பற்றாக்குறைக்கு வாய்ப்பு ஏற்படக் கூடும் என்பதால் மின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேபோல் நிலம் புயல் மகாபலிபுரம் அல்லது கல்பாக்கம் பகுதியில் கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது.
நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் கல்பாக்கம் அணு மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் ஏற்கெனவே மின்வெட்டில் தத்தளிக்கும் தமிழகம் இருளில்தான் மூழ்கிக் கிடக்க வேண்டும் என்ற அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications