மோடியிடம் அமெரிக்காவும் ‘சரண்டர்’: விசா தரத் தயாராம்!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பலர் பதிப்பிற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா அளிக்க அமெரிக்கா மறுத்து வந்தது. 2005ம் ஆண்டு அவர் அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தும் அளிக்கப்படவில்லை. இது நரேந்திர மோடிக்கு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
விசா தடை நீக்கம்
இந்நிலையில், மோடி எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கலாம் எனவும், அவர் விண்ணப்பித்தால் அதனை பரிசீலித்து அவருக்கு விசா வழங்குவோம் எனவும் செவ்வாய்கிழமையன்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுபற்றி பேசிய மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் ராபர்ட் பிளேக், ‘எங்கள் நாடு குஜராத்துடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களின் மிகமிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக குஜராத் இருக்கிறது. மோடியைப் பற்றி நான் யூகிக்க விரும்பவில்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் விசாவுக்காக விண்ணப்பிக்கலாம். மோடி விண்ணப்பித்தால் அவரது விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
இணக்கம் காட்டிய இங்கிலாந்து
மோடியை தொடர்ந்து புறக்கணித்து வந்த இங்கிலாந்து அரசு சமீபத்தில் மோடி மற்றும் குஜராத்துடனான உறவைப் புதுப்பித்துக் கொண்டது. இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர் ஆணையர் ஜேம்ஸ் பெவன் மோடியை சந்தித்துப் பேசினார்.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குஜராத் முதல்வருடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி வருவதால் 2014 ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications