நிலம் புயல்-அலுவலகம் சென்றோர் உடனே வீடு திரும்ப சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை பெருநகரம் பெரும் புயலை சந்தித்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. ஒவ்வொரு முறையும் சென்னை நோக்கி வரும் புயல் திசைமாறி ஆந்திரா மற்றும் ஒடிஷா நோக்கி நகர்ந்துவிடும். ஆனால் இம்முறை சென்னைக்கு தெற்கே தான் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் சென்னைவாசிகள் பீதிக்குள்ளாகினர்.
சென்னைக்கு மிக அருகே தென்பகுதியில் நிலம் புயல் கரையைக் கடக்கும் என்பதால் சென்னையும் பாதிப்படைய கூடும். வழக்கம் போல இன்றி இம்முறை கனமழை இல்லாமல் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழை பெய்தால் காற்றின் வேகம் குறைந்திருக்கும். புயல் கரையைக் கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் சென்னை மெரினா கடற்கரை பெரும் சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற பீதி ஏற்பட்டது.
இதனால் கடற்கரை சாலையில் உள்ள பெரு மரங்களும் மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்துவிடும் என்ற அச்சம் நிலவியது. மேலும் புயலினால் கடலோர குடிசைகளில் வசிக்கும் மக்களை தங்க வைக்க 282 மாநகராட்சி பள்ளிகள் தயார்ப்படுத்தப்பட்டன.
இதேபோல் 52 சமுதாயக் கூடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மின் கம்பிகள் அறுந்து விழுந்து, அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காக்கும் விதமாக மின்சார வாரியத்துடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியது.
பொதுமக்கள் புகார்களை உடனடியாக மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக 1913 என்ற கட்டணமில்லா உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வேண்டுகோள்:
இந்த நிலையில் சென்னையில் பலத்த காற்றும் மழையும் தொடர்ந்து நீடித்ததால், புயல் கரையை கடக்கும் நேரத்திற்கு முன்பாக அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற அனைவரும் உடனே வீடுகளுக்கு திரும்புமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது. சென்னை மாநகர ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications