நகராட்சிக் கூட்டத்திற்கு கொசுவலையுடன் வந்த கவுன்சிலர்கள்.. பறித்துக் கிழித்த அதிமுகவினர்
புதுக்கோட்டை: டெங்கு காய்ச்சலை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத நகராட்சியைக் கண்டித்து புதுக்கோட்டையில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி கவுன்சிலர்கள் நகராட்சிக் கூட்டத்திற்கு கொசு வலையுடன் வந்தனர். இதனால் கோபமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் கொசுவலையைப் பறித்துக் கிழிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் நகரப் பகுதிகளில் கொசுக்களின் தொல்லையால் டெங்கு போன்ற நோய்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நகரில் சாக்கடைகள் நிறைந்து ஓடுகிறது. அதனால் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்களை கடித்து டெங்கு காய்ச்சலை உருவாக்கி உள்ளது. எனவே நகரை சுத்தமாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது கவுன்சிலர்களின் கோரிக்கை.
ஆனால் கொசுவை ஒழிக்க அதிமுக தலைமையிலான நகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டு.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக மற்றும் கவுன்சிலர்கள் கொசு வலையுடன் நகர்மன்ற கூட்டத்திற்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் கொசுவலைகளை பிடுங்க முயன்றனர். இதனால் நகர்மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக நிர்வாகத்தைக் கண்டித்து நகர்மன்றத்தில் நடுவில் அமர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் முழக்கமிட்டத்தால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு உருவானது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications