ஊழல் புரிந்திருந்தால் யாராக (கட்காரி) இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.
சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்குளாவோர் மீதான புகார் நிரூபிக்கபட்டால் சம்பந்தப்பட்ட நபர் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விளக்கம் அளித்துள்ளது.
பாஜக தலைவர் நிதின் கட்காரி ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாதுகாத்து வருகிறது என்று கூறப்படும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இத்தகைய ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசியக் குழுக் கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இணை செயலாளர் தத்தாரேயா கூறுகையில், ஊழலையும் முறைகேட்டையும் நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். தனிப்பட்ட நபர் மீதோ அல்லது கட்சிகள் மீதோ குற்றம்சாட்டப்பட்டால் அந்த குற்றச்சாட்டுகள் பொய் என்பதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டும்,
கெஜ்ரிவால் கூறுகிற குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாவும்தான் பதிலளிக்க வேண்டும். யாராவது ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்வதுடன் சட்டப்படி தண்டிக்கப்படவும் வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசியக் குழுக் கூட்டத்தில் பொதுவாக ஊழல் விவகாரங்கள் பற்றி விவாதிப்போம். எந்த ஒரு தனிப்பட்ட நபர் மீதான புகார் குறித்தும் விவாதிக்கமாட்டோம். பாஜக தலைவர் பொறுப்பில் யார் உட்கார வேண்டும்? வேண்டாம் என்பதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றார் அவர்.
கட்காரி புகார் குறித்து பாரிக்கர்
இதனிடையே பாஜக மூத்த தலைவரும், கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் அளித்த பேட்டி ஒன்றில், சில நபர்களின் சில நடவடிக்கைகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தங்கள் கட்சிக்கு பதில் சொல்லியாக வேண்டும். அது கட்காரியாக இருந்தாலும், வத்ராவாக இருந்தாலும், ஏன் பிரதமராக இருந்தாலும் தங்கள் கட்சிக்கு, அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் பதில் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications