தலைமுடிக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கை பெண் கைது
சென்னை: இலங்கையில் இருந்து தலைமுடிக்குள் தங்க கட்டிகளை வைத்து மறைத்து, சென்னைக்கு கடத்த முயன்ற பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று காலையில் விமானம் ஒன்று வந்திறங்கியது. இதில் வந்தவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண்ணின் தலைமுடி வழக்கத்திற்கு மாறான மிகவும் உயர்ந்து காணப்பட்டது.
இதை கண்டு சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது தலைமுடியை சோதனையிட்டனர். அப்போது அப்பெண்ணின் தலையில் இருந்த டோப்பா முடிக்குள் 877 கிராம் எடை கொண்ட 7 தங்க கட்டிகள் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சவுரியாமும்தாஜ் என்பதும், சுற்றுலா விசாவில் அவர் இந்தியாவிற்கு வந்ததும் தெரியவந்தது. மேலும் தனது தலைமுடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைத்தால், இலங்கையை சேர்ந்த ஏஜெண்ட் அதற்கு ரூ.5 ஆயிரம் பணம் தருவதாக கூறியதும் தெரிந்தது.
மும்தாஜ் கடத்த முயன்ற தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.27 லட்சம் இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே மும்தாஜை இலங்கையில் இருந்து அனுப்பி வைத்த ஏஜெண்ட் யார்?, சென்னையில் அவரிடம் தங்க கட்டிகளை வாங்க இருந்த நபர் யார்? என்பவை குறித்த விசாரணை நடந்து வருகிறது.
'அயன்' படத்தில் நடிகர் சூர்யா, தனது தலைமுடியில் வைரங்களை மறைத்து வைத்து வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதே பாணி, இலங்கையை சேர்ந்த மும்தாஜூம் கடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications