உமாசந்திரன் எழுதிய நூல் எது... டிஎன்பிஎஸ்சி தேர்வில் இப்படியும் கேள்வி!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடந்த டிஎன்பிஎஸ்டி குரூப் 2 தேர்வில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜின் தந்தை குறித்த ஒரு கேள்வியும் இடம் பெற்றிருந்ததாம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப் 2 தேர்வு நடந்தது. ஆனால் வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆகி விட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் இன்று நடந்தது. கடந்த தேர்வை எழுதியவர்கள் மட்டும் இதில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்வில் ஒரு சுவாரஸ்ய கேள்வி இடம் பெற்றிருந்ததாக தேர்வு எழுதியவர்கள் குறிப்பிட்டனர். அதாவது டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜின் தந்தை குறித்த கேள்விதான் அது.
அதற்கு முன்பு நடராஜின் தந்தை குறித்த தகவலைப் பார்ப்போம்... நடராஜின் தந்தை பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். இவர் நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் உடன் பிறந்த அண்ணன் ஆவார். உமா சந்திரன் என்ற புனை பெயரில் எழுதி வந்தார். பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
அவர் எழுதிய நூல்களில் ஒன்றுதான் முள்ளும் மலரும். இந்தக் கதையைத்தான் இயக்குநர் மகேந்திரன் பெற்று அதை முள்ளும் மலரும் என்ற பெயரிலேயே திரைப்படமாக்கினார். ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, ஷோபா ஆகியோர் நடித்த இப்படம் பெரும் ஹிட் ஆனது.
இப்போது டிஎன்பிஎஸ்சி கேள்விக்கு வருவோம்... பொருத்து என்ற பகுதியில், எழுத்தாளர் உமாசந்திரன் எழுதிய நூல் என்று கேட்கப்பட்டு அதற்குரிய பதில்கள் தரப்பட்டிருந்தன. அதில் முள்ளும் மலரும் என்ற விடையும் இருந்தாம்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications