கவர்ச்சி அழகிகளை வைத்து சவப்பெட்டிக்கு விளம்பரம் தேடும் போலந்து நிறுவனம்

போலந்தைச் சேர்ந்த லின்ட்னர் என்ற நிறுவனம் சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தனது தயாரிப்பு சவப்பெட்டிகளுக்கு விளம்பரம் தேட அது காலண்டர் தயாரித்துள்ளது. 2013ம் ஆண்டு காலண்டரை அது வித்தியாசமாக தயாரித்துள்ளது.
அதாவது கவர்ச்சிகரமான அழகிகள் சவப்பெட்டிகளுடன் போஸ் தருவது போன்ற படங்களை இந்த காலண்டரில் அது இடம் பெறச் செய்துள்ளது.
அரை நிர்வாண, முக்கால் நிர்வாண கோலத்தில் பெண்கள் போஸ் கொடுத்துள்ளனர். சிலர் ஜெர்மனி நாட்டு ஆயில் பெயிண்டிங் முறைப்படி உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் போஸ் கொடுத்துள்ளனர். இது அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது பொருத்தமற்ற செயல் என்று கிறிஸ்தவ அமைப்புகள், சர்ச்சுகள் கண்டித்துள்ளன. மரணம் என்பது புனிதமானது. அதை செக்ஸ் கலந்து விளம்பரப்படுத்துவது தவறு என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.
ஆனால் இதை நிராகரித்துள்ளார் லின்ட்னர் நிறுவன உரிமையாளரான ஜிபிங்யூ லின்ட்னர். இதுகுறித்து அவர் கூறுகையில், இது எனது மகனின் யோசனை. ஒரு அழகான காலண்டராக இது உருவாகியுள்ளது. இதில் அசிங்கம் எதுவும் இல்லை. மேலும் சவப்பெட்டி தயாரிப்பு என்பது முற்றிலும் ஒரு பிசினஸ் விஷயம். இதை மத ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது. எனவே இது ஒரு வகையில் பிசினஸ் புரமோஷன் போலத்தான் என்று கூறியுள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications