புர்ஜ் கலீபாவில் 2 தளங்களை வளைத்துப் போட்டுள்ள இந்தியாவின் பி.ஆர். ஷெட்டி!
டெல்லி: உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்ட துபாயின் புர்ஜ் கலீபாவில் 2 தளங்களை அப்படியே ஒட்டுமொத்தமாக வாங்கிப் போட்டு அத்தனை இந்தியர்களையும் வாய் பிளக்க வைத்துள்ளார் இந்தியாவின் பி.ஆர்.ஷெட்டி

புர்ஜ் கலீபா என்றால் என்ன?
உலகிலேயே மிகவும் உயரமான கட்டடம் இதுதான். மொத்தம் 900 அபபார்ட்மென்ட்கள் இங்கு உள்ளன. 828 மீட்டர் உயரம் கொண்டது இந்தக் கட்டடம்.

ஒரு சதுர அடி விலை அம்மாடியோவ்...!
புர்ஜ் கலீபாவில் உள்ள அபார்ட்மென்ட்டை வாங்குவது என்பது பல பணக்காரர்களுக்கு பெரும் கனவாக உள்ளது. ஆனால் இங்கு விலையும் மிக அதிகம்தான். ஒரு சதுர அடி அங்கு தற்போது ரூ. 35,000 முதல் 40,000 வரை உள்ளதாம். டெல்லி, மும்பையில் உள்ளதை விட இது குறைச்சல்தான் என்றாலும் இங்கு ஒரு வீட்டை வாங்கிப் போடவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள்.

இந்தியர்களுக்கு 150 வீடுகள்
முற்றிலும் அரபுப் பணத்தில் கட்டப்பட்டிருந்தாலும் கூட இங்கும் இந்தியர்கள் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. 150 இந்தியர்களுக்கு இங்கு வீடுகள் உள்ளனவாம்.

ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா, மோகன்லால்
நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா, நடிகர் மோகன்லால், டெல்லி வழக்கறிஞர் ரோஹித் கோச்சார், எமிரேட்ஸ் என்எம்சி மருத்துவமனை அதிபர் பி.ஆர்.ஷெட்டி, தொழிலதிபர் என்.வி.ஜார்ஜ் உள்ளிட்டோர் இங்கு வீடு வாங்கிப் போட்ட பிரபலங்களில் சிலர்.

பி.ஆர்.ஷெட்டிக்கு மட்டும் 2 தளங்கள்
இவர்களில் தற்போது பி.ஆர்.ஷெட்டி அத்தனை இந்தியர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். மொத்தம் 2 தளங்களை அவர் ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி விட்டாராம். அங்குள்ள அத்தனை வீடுகளும் இவருக்குச் சொந்தமானவை.

ரூ 135 கோடி விலை
100 மற்றும் 140வது தளங்களை இவர் வாங்கி வைத்துள்ளார். இந்த இரண்டு தளங்களையும் வாங்க அவர் செலவிட்ட தொகை ஜஸ்ட் ரூ. 135.17 கோடிதான்.

யார் இந்த ஷெட்டி?
ஷெட்டி ஒரு சாதாரண சேல்ஸ்மேனாக வளைகுடா நாட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று வளைகுடா நாடுகளிலேயே மிகவும் பிரபலமான என்.எம்.சி. ஹெல்த்கேர் என்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைத் தொடரை நிர்வகித்து வருகிறார். வளைகுடாவில் வசித்தும் இந்தியப் பெரும் பணக்காரர்களில் ஷெட்டியும் ஒரு முக்கியஸ்தர்.

இந்தியாவுக்கும் வருகிறார்
அடுத்து இந்தியாவிலும் மிகப் பெரிய அளவிலான மருத்துவ சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் ஷெட்டி. பெங்களூர், சென்னை, கோவை, ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்களில் மிகப் பெரிய மருத்துவமனைகளை இவர் கட்டத் திட்டமிட்டுள்ளார்.

கர்நாடக 'பந்த்'
கர்நாடகத்தைச் சேர்ந்தவரான ஷெட்டி, பந்த் சமூகத்தைச் சேர்ந்தவர். கடும் உழைப்பால் முன்னேறியவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பிரவேசி பாரதிய சன்மான் ஆகிய விருதுகளைப் பெற்றவர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3000 படுக்கைகளைக் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை தொடரை உருவாக்குவதே இவரது லட்சியமாம்.

துபாய் முதல் ஷார்ஜா வரை!
துபாய், அபுதாபி, அல் ஐய்ன், ஷார்ஜா ஆகிய நகரங்களில் இவரது மருத்துவமனைகள், பார்மசிகள் உள்ளன. இந்தியக் கனவு தவிர மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளிலும் இவர் கண் வைத்துள்ளாராம். கத்தாரிலும் விரைவில் மருத்துவமனையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications