டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் அவுட் : முக்கிய குற்றாவளி கைது
ஈரோடு: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஒடிசாவைச் சேர்ந்த அச்சக ஊழியர் ஒருவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த தியாகராஜன், செந்தில்குமார், ஸ்ரீதர்ராஜ் (எ) பாலன் ஆகியோர் மூலம்தான் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வினாத்தாள் வெளியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒடிசா புவனேஸ்வரில் ரயில்வே துறையில் பணியாற்றிய ஆனந்தராவ் கைது செய்யப்பட்டப்பின் இவ்வழக்கு விசாரணை மந்தகதியிலேயே இருந்தது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கு ஈரோடு நகர காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
ஒடிசா வழக்கறிஞர் கைது
இந்நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதியன்று ஒடிசாவை சேர்ந்த வழக்கறிஞர் ககூன் சேனாதி பிகாரி (49) என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஒடிசாவில் உள்ள ஒரு அச்சகத்தில் பணியாற்றி வந்த புவனேஸ்வரை சேர்ந்த கோத்ரா மோகன் மந்த்ராவிடம் இருந்து ககூன் கேள்வித்தாளை பெற்றதும், தனது நண்பரான ஆனந்தராவ் மூலம் தமிழகத்தில் கேள்வித்தாளை பல லட்சத்துக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி இருந்த கோத்ரா மோகன் மந்த்ராவை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது. அப்போது ஈரோட்டில் உள்ள ஓர் மையத்தில் கேள்வித்தாளின் நகலை கையில் வைத்திருந்ததாக பவானியை சேர்ந்த தனக்கொடி, அவரது கணவர் செந்தில், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட 15 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications