தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கக் கோரிய வழக்கு – உச்சநீதிமன்றத்தில் 7ம் தேதி விசாரணை
டெல்லி: டெல்லி அரசு ஒப்படைத்துள்ள கூடுதல் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 7ம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்கக் கோரி இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. மனுவில், டெல்லி அரசு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை, ஆயிரத்து 721 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை மத்திய தொகுப்புக்கு அளிக்க உள்ளதால், அந்த மின்சாரத்தை, மின் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்துக்கு வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.
இதுதவிர, மத்திய மின் தொகுப்பில் இருந்து தெற்கு மின் தொகுப்பில்இணைப்பதற்கு போதிய மின் வழித்தடங்கள் இல்லாததால், அதற்கான வழித்தடங்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.
மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த இன்னொரு மனுவில், டெல்லி வழங்கும் கூடுதல் மின்சாரத்தை வேறு எந்த மாநிலத்துக்கும் வழங்காமல், தமிழகத்துக்கு மட்டும் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசின் மனுவை, அவசர நிலையை கருத்தில் கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 7ம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications