தமிழக முட்டை, கோழிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – கேரள அரசு உத்தரவு
நாமக்கல்: பறவைக்காய்ச்சல் பீதியால் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் முட்டை மற்றும் கறிக்கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கேரள அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் கறிக்கோழி, முட்டை உற்பத்தியாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கியதன் எதிரொலியாக கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் இருந்து முட்டை மற்றும் கறிக்கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களை கேரளாவிற்குள் அனுமதிக்காததால், கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கமடைந்தன.
இந்த தடையை விலக்கிக் கொள்வது குறித்து, நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்கள், கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து, கோரிக்கை விடுத்தனர். இதன்பின், தடையை நீக்க, கேரள அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இன்று பகல் 12 மணியில் முதல், கேரளா எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக, முட்டை மற்றும் கறிக்கோழி வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளது.
எனினும், இவ்வாறு வரும் வாகனங்கள், முட்டைகள் மற்றும் கறிக்கோழிகள் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டன என்பதற்கும், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்பதற்கான கால்நடை பராமரிப்புத் துறையின் சான்றிதழையும் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறிக்கோழி, முட்டைகளுக்கு கேரளா அரசு விதித்திருந்த தடை நீக்கப்பட்டதால் தமிழக கறிக்கோழி உற்பத்தியாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications