திருப்பூரில் அதிமுக கவுன்சிலர் 'காட்டன்' முத்து வெட்டிக் கொலை
திருப்பூர்: திருப்பூரில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அதிமுக கவுன்சிலர் காட்டன் முத்து மர்ம மனிதர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் கொடிக்கம்பம் அருகில் உள்ள என்.ஆர்.கே. புரத்தைச் சேர்ந்தவர் காட்டன் முத்து (60). 22வது வார்டு அதிமுக கவுன்சிலர். அவரது மனைவி சுப்புலட்சுமி. அவர்களுக்கு சித்ரா, காந்திமதி என்ற 2 மகள்கள் உள்ளனர். காட்டன் முத்து இரவு நேரத்தில் வீட்டுக்கு முன்பு கட்டில் போட்டு தூங்கும் பழக்கமுள்ளவர். நேற்றிரவும் வீட்டுக்கு முன்பு கட்டில் போட்டு தூங்கினார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் அங்கு வந்து முத்துவின் கழுத்தில் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை அவரது மனைவி சுப்புலட்சுமி கதவைத் திறந்து வெளியே வந்தபோது தனது கணவர் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். என் கணவரை கொன்றுவிட்டார்களே என்று அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காட்டன் முத்து 3 முறை கவுன்சிலராக இருந்தவர். அவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான அதிமுகவினர் சம்பவ இடத்தில் திரண்டுவிட்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அரசியல் முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications