தோல்வியை ஏற்று ஒபாமாவை வாழ்த்திய ராம்னி! - அரசியலிலிருந்து ஓய்வு!

இந்தத் தேர்தலில் ஒபாமாவுக்கு 284 வாக்குகள் கிடைத்துவிட்டன. அறுதிப் பெரும்பான்மையுடன் அவர் மீண்டும் அதிபராகத் தொடர்கிறார்.
மேலும் பாப்புலர் வாக்குகள் என்ற பிரிவில் ஒரு சதவீதம் பின்தங்கியிருந்த ஒபாமா, இப்போது அதிலும் வென்றுவிட்டார்.
இந்த நிலையில் தோல்வியை ஒப்புக் கொண்டார் ராம்னி. இதனை தனது ஆதரவாளர்களுக்கும் தெரிவித்து, தனக்காக வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தொலைபேசியில் அதிபர் ஒபாமாவை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் ராம்னி. முதல் பெண்மணி மிஷல் மற்றும் ஒபாமாவின் குழந்தைகளுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
'அதிபர் ஒபாமா அடுத்த நான்கு ஆண்டுகள் அமெரிக்காவை சிறந்த வழியில் அழைத்து செல்வார்' என நம்புவதாக அவர் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.
அவருடன் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட பால் ரயன், மனைவி ஆன் ராம்னி மற்றும் ஆதரவாளார்களுக்கு நன்றி தெரிவித்தார். கட்சி அடிப்படையில் பிளவுபடாமல் அமெரிக்கர்களாக ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
'அமெரிக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நான் போட்டியிட்டேன். கடவுள் அமெரிக்காவை காப்பாற்றட்டும்," என்றார் இறுதியாக.
கவர்னராகவோ, செனட் உறுப்பினராகவோ இல்லாததால், இந்தத் தோல்வியுடன் அரசியலிலிருந்து ஒய்வு பெறுகிறார் ராம்னி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications