திருமாவளவன் மீது நில அபகரிப்பு வழக்கு: தலித் அமைப்புகள் கண்டனம்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் எம்.பி. மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 30 பேர் மீது நில அபகரி்ப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் அருகே உள்ளது காரணை. அங்கு ஆதி திராவிடர் பஞ்சமி நிலம் உள்ளது. அங்கு பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிரிழந்த ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தாண்டுக்கான கூட்டம் கடந்த மாதம் நடந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தீபன் சக்ரவர்த்தி என்பவர் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் தனது மனுவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தன் நிலத்தை சேதப்படுத்தியதோடு, அதை ஆக்கிரமித்து மணிமண்டபம் கட்ட முயற்சி செய்தவாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து விசாரித்த போலீசார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் எம்.பி, மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன், துணைச் செயலாளர் கிட்டு உள்ளிட்ட 30 பேர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என பல்வேறு தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications