கலப்புத் திருமணத்தால் தர்மபுரியில் பற்றி எரிந்த தலித் கிராமம்
தர்மபுரி: தருமபுரி அருகே இருவேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஒரு கிராமமே பற்றி எரிந்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் பதற்றம் உருவாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் நத்தம் காலணியைச் சேர்ந்த இளவரசனை காதலித்தார். இளவரசன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, திவ்யா வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் திவ்யாவின் தந்தை நாகராஜ், இளவரசன் வீட்டுக்கு சென்று தன் மகளை தன்னுடன் அனுப்பிவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுத்துவிட்ட இளவரசன், திவ்யா இப்போது என் மனைவி இனி அவள் என்னுடன்தான் இருப்பாள் என்று உறுதியாக கூறிவிட்டார்.
இதனால் மனமுடைந்த நாகராஜ் உறவினர்கள் தன்னை கேலி செய்வார்கள் என்று அஞ்சி புதன்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து செல்லம்பட்டியைச் சேர்ந்தவர்கள் நாகராஜின் உடலை வைத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தீ வைத்து எரித்தனர்
அதே ஆத்திரத்தோடு, நத்தம் காலணி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும், பொருட்களையும் அடித்து நொறுக்கி, குடிசைகளுக்கு தீ வைத்தனர். இதில் குடியிருப்புகள் மொத்தமும் எரிந்து சாம்பலானது. அந்த பகுதியில் இருந்த மரங்களை வெட்டி சாய்த்த நபர்கள், நத்தம் காலணியில் இருந்த இருசக்கர, நான்குசக்கர வாகனங்களையும் தீவைத்து எரித்தனர்.
ஊருக்குள் தீயணைப்புத் துறையோ போலீஸாரோ, வருவாய்த் துறையினரோ பத்திரிகையாளர்களோ செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீ வைத்தவர்கள் கைது
இதனிடையே குடிசைகளுக்கு தீவைத்த கலவரக்காரர்கள் 90 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க மாவட்ட ஆட்சியர் லில்லி உத்தரவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications